தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து 2 சிறப்பு ரயில்கள்

வரும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாட இருப்பதை அடுத்து நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் விடப்பட்டது என்பதும் இதனை அடுத்து ஏராளமான சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னிந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அந்த சிறப்பு ரயில்கள் குறித்த முழு விவரத்தை தற்போது பார்ப்போம்

1. சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்:06037), இன்று (செவ்வாய்கிழமை) இரவு 10.05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். இந்த ரயில் நாளை காலை 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக நாகர்கோவில்-எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06038), வரும் 5-ந்தேதி மதியம் 3.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை வந்தடையும்.

2. தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (06039), வரும் 8-ந்தேதி மாலை 4 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை சென்றடையும். இதைப்போல் நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் (06040) வரும் 7-ந்தேதி மாலை 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இவ்வாறு தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print