உஷார்! தென் மாவட்டங்களுக்கு அலர்ட்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் வருகின்ற 2 நாட்களில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இது அடுத்த 48 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகரும். இதனால் டிசம்பர் .20, 21 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று முதல்! ஆவின் வெண்ணெய் விலை உயர்வு.. பொதுமக்கள் கவலை!!

அதே போல் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

வருகின்ற டிச.20-ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

மாணவர்களே அலர்ட்! நாளை விடுமுறை கிடையாது..!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.