
News
8 ஏவுகணைகளை சோதித்து வடகொரியாவை வாயடைக்க வைத்த தென்கொரியா!!
உலகில் ஒரு சில நாடுகளுக்கு எப்போதும் ஆகவே ஆகாது என்பது போல் காணப்படும். ஏனென்றால் அந்த நாடுகள் மாறி மாறி தங்களது ராணுவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற முயற்சியில் சோதனைகள் நடத்தி கொண்டு வருவார்கள்.
அந்தவகையில் வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை சோதனைகள், வெடிகுண்டு சோதனைகளை நடத்தி கொண்டு வருவர். அதுவும் குறிப்பாக வட கொரியா அவ்வப்போது தென் கொரியாவின் கடல் பகுதிகளில் ஏவுகணை சோதனையை நடத்தும்.
இந்த நிலையில் தற்போது தென் கொரியா 8 ஏவுகணைகளை சோதித்து வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக தெரிகிறது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்காவும் செயல்பட்டுள்ளது.
வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணைகளை சோதித்து வரும் நிலையில் பதிலடி தரும் வகையில் தென்கொரியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இரண்டு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை சோதனை நடத்தி உலக அளவில் பெரும் சலசலப்பை உண்டாக்கிக் கொண்டு வருகின்றனர்.
