மனித மூளையைத் தாக்கிய அமீபாவால் உயிரிழப்பு: கொரோனாவுக்கு அடுத்த ஆபத்தா?

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் மனித மூளையை தாக்கிய அமீபாவால் தென் கொரியா நாட்டில் ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரிய நாட்டைச் சேர்ந்த 50 வயது நபரொருவர் கடந்த நான்கு மாதங்களாக தாய்லாந்தில் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் நாடு திரும்பினார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருடைய மூளையை அமீபா தாக்கி உள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கொண்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென அவர் உயிரிழந்தார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 381 பேர் வரை அமீபா தாக்கி உயிரிழந்த நிலையில் தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவுக்கு அடுத்ததாக அமீபா ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.