தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்: வாக்கு எண்ணிக்கை எப்போது தெரியுமா ?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019- ஆம் ஆண்டில் ஜுன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால்  வாக்குஎண்ணிக்கை நடத்தப்படாமல் வங்கியில் வைத்து வாக்கு பெட்டிகள் பூட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு  நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததை யொட்டி தற்போது  வாக்குஎண்ணிக்கையானது வருகின்ற  மார்ச் 20- ஆம் தேதி நடத்தலாம் என்று உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வாக்குஎண்ணிக்கையானது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு கான்வெண்ட்டில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க தேர்தலை பொருத்த வரையில் விஷால் தலைமையில் ஒரு அணியும் ஐஸ்வர்யா கணேஷ் மற்றும் கே. பாக்கியராஜ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டனர். இந்த அணியில் எந்த அணி வெற்றி பெற போகிறது என பரபரப்பு சூழல் உருவாகி வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கையில் முகவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment