பங்களாதேசை பதம்பார்த்த தென்னாப்பிரிக்கா! 84 ரன்களில் ஆல்-அவுட்; கெத்தான வெற்றி!

தற்போது 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகள் ஏ பிரிவில்  உள்ளன.தென்னாப்பிரிக்கா

ஏ பிரிவில் உள்ள அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் இன்றைய தினம் பல பயிற்சி மேற்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது பங்களாதேஷ் அணி. ஆனால் பங்களாதேஷ் அணியால் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களின் பந்தை சமாளிக்க முடியவில்லை.

இதனால் அவர்கள் 84 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். 85 ரன்கள் என்ற சிறிய இலக்கை எதிர் நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கியது தென்ஆப்பிரிக்கா அணி. தென் ஆப்பிரிக்கா அணியும் இந்த 84 ரன்கள் அடிக்க தடுமாறி இருந்தாலும் இறுதியில் 13.3 ஓவரில் வெற்றி இலக்கை தாண்டி போட்டியை வெற்றி பெற்றது.

இதனால் புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா தான் விளையாடிய 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபாடா மற்றும் மற்றும் நோர்தே 3 விக்கெட்களை வீழ்த்தினார். ரபாடாவே பிளேயர் ஆப் தி மேட்ச் ஆகவும் திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment