யாக்ஞவ்ல்ய மஹரிஷி இயற்றிய சூரிய கவசம்

45a6983a732b7f9f17a5385c0d31c200

சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி சிறக்கும். யாக்ஞவல்க்ய மஹரிஷியால் இயற்றப்பட்டது இந்த ஸ்தோத்திரம்.

ஸ்ருணுஷ்வ முனிஸார்தூல ஸுர்யஸ்ய கவசம் ஸுபம்
ஸரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்ய தாயகம்
ஓ முனிச்ரேஷ்டா! சரீரத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுக்கக்கூடியதும்,
சிறந்ததும், ஸர்வ பாக்கியங் களைக் கொடுக்கக்கூடியதும்
மங்களகரமுமான சூரிய கவசத்தைக் கேளும்.
தேதீப்யமானமுகுடம் ஸ்புரம்மகரகுண்டலம்
த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்ரோத்ர மேததுதீர்யேத்
மிகவும் பிரகாசிக்கின்ற கிரீடத்தையுடையவரும்,
ஒளிவீசும் மகர குண்டலங்களை அணிந்தவரும்,
ஆயிரக்கணக்கான கிரணத்தையுடையவருமான
சூரியபகவானை தியானம் செய்து இத்துதியை ஜபிக்க வேண்டும்.
ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேமிதத்யுதி:
நேத்ரே தினமணி: பாது ஸ்ரவணே
வாஸரேஸ்வர:
என் தலையை பாஸ்கரன் ரட்சிக்க வேண்டும். என் நெற்றியை அளவற்ற ஒளிபொருந்தியவன்
காக்கவேண்டும். கண்களை தினமணியானவன் ரட்சிக்க வேண்டும். காதுகளை உலகுக்கே
ஈஸ்வரனான சூரியன் ரட்சிக்க வேண்டும்.
க்ராணம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவா ஹன:
ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மே
ஸுரவந்தித:
என் மூக்கை வெப்பமுள்ள கிரணமுள்ளவன் ரட்சிக்க வேண்டும். என் முகத்தை வேதங்களையே குதிரைகளாகத் தன் தேரில் பூட்டிக்கொண்ட
ஆதவன் காக்க வேண்டும். என் தொண்டையைத் தேவர்களால் பூஜிக்கப்பட்டவன் ரட்சிக்க வேண்டும்.
ஸ்கந்தௌ: ப்ரபாகர: பாது வக்ஷ: பாதுஜனப்ரிய:
பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர:
என் தோள்களை ஒளி மிகுந்தவன் செய்கிறவன் காக்க வேண்டும்.
மார்பை ஜனங்களுக்குப் பிரியன் ரட்சிக்க வேண்டும். கால்களை பன்னிரண்டு
உருவமுள்ளவன் (பன்னிரு ஆதித்யர்கள்) ரட்சிக்க வேண்டும்.
அவயங்களையும் எல்லாவற்றையும் ஈஸ்வரன் ரட்சிக்க வேண்டும்.
ஸுர்யரக்ஷாத்மகம் ஸ்தோத்ரம் லிகித்வா பூர்ஜபத்ரகே
ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வ ஸித்தய:
யாரொருவர் சூர்ய ரட்சா ரூபமான இந்த ஸ்தோத்திரத்தை பூர்ஜபத்திரத்தில் (மரத்தின் பட்டை) எழுதித் தன் கையில் தரித்துக் கொள்கிறானோ
அவனுக்கு எல்லா ஸித்திகளும் வசமாகயிருக்கும்
ஸுஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக்யோதீதே ஸ்வஸ்த்தமானஸ:
ஸ ரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம்  ச விந்ததி.
யார் நன்கு ஸ்நானம் செய்து இத்துதியை ஜபம் செய்கிறாரோ, யார் ஏகாக்ர சித்தத்துடன் இத்துதியை அத்யயனம் செய்கிறாரோ அவர் ரோகமற்றவராயும், நீண்ட ஆயுளை உடையவராயும் சுகத்தையும், பலத்தையும் அடைகிறார்.
இந்த ஸ்தோத்திரத்தைத் தவிர கீழ்க்காணும்
சூரிய மங்கள ஸ்லோகத்தையும் சூர்ய காயத்ரி
மந்திரங்களையும் உடன் ஜபித்து வரலாம்:
சூர்ய மங்கள ஸ்லோகம் !
பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ
குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்வரங்முக:
சத்ருர் பார்க்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ
மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி, காச்யப கோத்ரம், நவகிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் எனக்கு எல்லா மங்களத்தை அருளட்டும் !
சூரிய பகவான் !
காசினி இருளை நிக்கும் கதிரொளியாகி யெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தைநல்கும்
வாசியேழுடைய தேர்மெல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி
சூர்யன் த்யான ஸ்லோகம் !
ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்
சூரியன் காயத்ரி !
அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய: ப்ரயோதயாத்
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி
வீரியா போற்றி, வினைகள் களைவாய் போற்றி

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.