சூரி Vs சந்தானம்… நெட்டிசன்கள் கருத்து…

தமிழ் சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து கடின உழைப்பாலும் விடாமுயற்சியினாலும் முன்னணியில் வந்து முக்கிய பிரபலங்களில் ஒருவராக ஆனவர்கள் நடிகர்கள் சூரி மற்றும் சந்தானம். நகைச்சுவை நடிகர்களாக திரையுலகில் அறிமுகமாகி இன்று படத்தின் நாயகர்களாக வலம் வருபவர்கள்.

சின்னத்திரை விஜய் டிவியின் லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சியில் தோன்றி அறிமுகமானவர் சந்தானம். இதன் மூலம் சினிமா வாய்ப்பு வந்து காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார். 2004 ஆம் ஆண்டு ‘மன்மதன்’ திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் சந்தானம். டைமிங்கில் கௌண்ட்டர் காமெடி செய்வதில் சந்தானம் வல்லவர். அதற்காக பல ரசிகர்களைக் கொண்டவர். ஆர்யாவுடனும், உதயநிதி உடனும் சந்தானம் நடித்த படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றது. இவ்விருவருடன் சந்தானத்திற்கு நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது மக்களை ரசிக்க வைத்தது.

அதே போல், சூரி பின்னணியில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றி, சினிமா வாய்ப்பிற்காக சாப்பாடு இல்லாமல் அலைந்து, கிடைத்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்தி பிரபலமாகி தற்போது ஹீரோ இடத்தை பிடித்து படம் நடித்து ஹிட்டாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கார் சூரி.

தற்போது நெட்டிசன்கள் சந்தானத்தையும் சூரியையும் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். தற்போது ‘கருடன்’ திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடித்து வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. அதனால் சந்தானம் காமெடியனில் இருந்து ஹீரோவாக நடித்த போது யாரும் பெரிதாக வரவேற்கவில்லை ஆனால் சூரி அவர்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததை பற்றி பேசி வருகின்றனர். மற்றொரு குழுவினர் சூரியையும் சந்தானத்தையும் ஒப்பிட்டு பேசாதீர்கள் ஏனென்றால் இன்று சூரியை மேல தூக்கிவிட ஆதரவாக வெற்றிமாறன், சசிகுமார், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் உள்ளனர் ஆனால் சந்தானம் தனி மனிதனாக சாதித்தவர் என்று கூறி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews