Connect with us

ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு: பிரபல இயக்குனர் திட்டம்:

Entertainment

ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு: பிரபல இயக்குனர் திட்டம்:

57008e672f7a09d63af39e0404dce6fd

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடிக்கும் படம் ஒன்றையும், சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்தால் முதலில் சூரி படத்தை இயக்கி முடித்து விட்டு அதன் பின் சூர்யாவின் ’வாடிவாசல்’ படத்தை இயக்கி இருப்பார்

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சூரி படத்தின் படப்பிடிப்பு தடைபட்டதால் தற்போது இரண்டு தயாரிப்பாளருக்கும் தங்களுடைய திரைப்படத்தை முதலில் இயக்கி கொடுக்கும்படி வற்புறுத்துவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து வெற்றிமாறன் இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் இயக்க முடிவு செய்துள்ளாராம். சூரி நடிக்கும் திரைப்படம் ஒரு பக்கமும், சூர்யா நடிக்கும் திரைப்படம் ஒரு பக்கமும் இயக்கப்பட உள்ளதாகவும் தனது உதவியாளர்கள் மற்றும் இணை இயக்குனர்களின் ஒத்துழைப்பால் இதனை அவர் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது

ஒரு சில நாட்கள் சூரியின் படப்பிடிப்பிலும் ஒருசில நாட்கள் சூர்யாவின் படப்பிடிப்பிலும் வெற்றிமாறன் மாறி மாறி மேற்பார்வையிடுவார் என்று தெரிகிறது. இதனால் சூரி மற்றும் சூர்யா படங்கள் ஒரே நேரத்தில் முடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் இரண்டு பட தயாரிப்பாளர்களையும் வெற்றிமாறன் திருப்திப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top