Connect with us

பாதயாத்திரைக்கு தயாராகும் நேரத்தில் சோனியா காந்தி வெளிநாட்டுப் பயணம்!!

sonia gandhi 1200 5

செய்திகள்

பாதயாத்திரைக்கு தயாராகும் நேரத்தில் சோனியா காந்தி வெளிநாட்டுப் பயணம்!!

கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்பு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு விதமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது.  மேலும் அந்த ஐந்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களையும் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை நடத்துள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலை திடீரென்று அவர் வெளிநாடு சென்றது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் தகவல் அளித்துள்ளார்.

சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் செல்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த மாதம் ராகுல் காந்தி பாதயாத்திரை பயணத்தை தொடங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top