
செய்திகள்
எனக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை? சோனியா உறுதியளித்தாங்களே!! பிரபல நடிகை ஆவேசம்;
தற்போது சினிமாவில் மிக முக்கிய கதாநாயகிகளாக வலம் வந்தவர்கள் கட்சியில் இணைவது சகஜமான ஒன்றாக மாறியுள்ளது, அதன்படி நடிகை குஷ்பு தற்போது பாஜக கட்சியில் உள்ளார்.
மேலும் குஷ்பு உள்ளிட்ட பல முன்னணி நாயகிகள் பாஜக கட்சியில் உள்ளனர். இந்த நிலையில் பிரபல நடிகை நக்மா தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நடிகை நக்மா காங்கிரஸ் கட்சியினரிடம் கேள்விகளை வைத்துள்ளார்.
ஏனென்றால் அவருக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன்படி தனக்கு ஏன் மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பளிக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியில் உள்ள நடிகை நக்மா கேள்வி எழுப்பி உள்ளார்.
கட்சியில் இணைந்த போது மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உறுதி அளித்து இருந்தார் என்றும் கூறியுள்ளார். ஆனால் மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா? என மகிளா காங்கிரஸ் பொது செயலாளர் நக்மா ட்விட் செய்துள்ளார்.
