Entertainment
புற்றுநோயில் இருந்து மீண்ட சோனாலி
தமிழில் காதலர் தினம் படத்தில் நெனச்சபடி நெனச்சபடி என்று ஆடிப்பாடிய அழகு தேவதை சோனாலி பிந்த்ரே. அதன் பின் தமிழில் வந்த கண்ணோடு காண்பதெல்லாம் படத்திலும் நடித்திருந்தார். கடும் புற்றுநோயால் திடீரென பாதிக்கப்பட்ட சோனாலி பிந்த்ரே நியூயார்க்கில் சிகிச்சை பெற்றார். புற்று நோயால் அவர் தலை முடி உதிர்ந்தது கண்டு பல சினிமா ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

இது குறித்து சோனாலி கூறியது.
புற்றுநோயை மறைக்க விரும்பாமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். ஆரோக்கியத்தை உருவாக்கும் எத்தனையோ பொருட்களுக்கு தூதுவராக இருந்த எனக்கு புற்றுநோய் என்றதும் வாழ்க்கை தலைகீழாக ஆனது. எல்லோரும் தைரியம் கொடுத்தனர். இதனால் நோயை எதிர்கொள்ள நம்பிக்கை வந்தது.
எத்தனையோ எண்ணைக்கு விளம்பரம் செய்த நான் எனது தலைமுடியை இழந்து விட்டேன். பழைய முடி எனக்கு இல்லை என்ற உணர்வு வருகிறது. ஆனாலும் எனது புருவங்கள் மறுபடியும் வந்து விட்டது. குணமாகி வந்த பிறகு பயம் இல்லாமல் போய் விட்டது. இனிமேல் எனது வாழ்க்கையில் பயம் என்பது இல்லை.” இவ்வாறு சோனாலி பிந்த்ரே கூறினார்.
