ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பிரபல நடிகரின் மகன்… பயிற்சிக்காக குடும்பத்துடன் துபாய்க்கு சென்ற நடிகர்….

90களில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் நடிகர் மாதவன். தற்போது ஹிந்தி தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாதவன் தனது மகனுக்காக நாட்டைவிட்டு துபாயில் குடியேறியுள்ளாராம்.

மாதவன்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் ஒரு நீச்சல் வீரர். சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் பங்கேற்று 7 பதக்கங்களை வென்றார். இதனை தொடர்ந்து 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க உள்ளாராம். எனவே இதற்காக முறையான நீச்சல் பயிற்சி பெறவுள்ளார்.

ஆனால் இங்கு அதற்கான வசதிகள் இல்லாததால் தற்போது மாதவன் குடும்பத்துடன் துபாய்க்கு குடிபெயர்ந்துள்ளார். இதுகுறித்து மாதவன் கூறியுள்ளதாவது, “மும்பையில் உள்ள பெரிய நீச்சல் குளங்கள் கோவிட் காரணமாக மூடப்பட்டுவிட்டன. நாங்கள் இங்கு துபாயில் வேதாந்துடன் இருக்கிறோம்.

அங்கு அவருக்கு பெரிய குளங்கள் உள்ளன. அவர் ஒலிம்பிக்கை நோக்கி உழைக்கிறார். சரிதாவும் நானும் அவருக்கு பக்கபலமாக இருக்கிறோம். அவர் உலகம் முழுவதும் நீச்சல் சாம்பியன்ஷிப்களை வென்று எங்களை மிகவும் பெருமைப்படுத்துகிறார். வேதாந்த் ஒரு நடிகராக வேண்டும் என்று நானும் எனது மனைவி சரிதாவும் விரும்பவில்லை” என கூறியுள்ளார்.

பொதுவாக ஒரு நடிகரின் மகனும் நடிகராகவே தந்தையின் வாரிசாக சினிமாவில் களமிறங்குவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் பல வாரிசு நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிகர் மாதவன் அவர் மகனை ஒரு நடிகராக்காமல் ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்து நாட்டிற்கு பெருமை சேர்க்க உள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment