Connect with us

குறட்டை விட்ட தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்: அதிர்ச்சி சம்பவம்

News

குறட்டை விட்ட தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்: அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேச மாநிலத்தில் தந்தை குறட்டை விட்டது தனக்கு இடைஞ்சலாக இருந்தது என்பதால் அவரது மகனே அவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற 28 வயது இளைஞர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு களைப்புடன் இரவு தூங்கச் சென்றுள்ளார். அப்போது அவரது 65 வயதான தந்தை ஏற்கனவே தூங்கிக்கொண்டு குறட்டை விட்டது நவீனுக்கு இடையூறாக இருந்தது

இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த நவீன் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து அருகே இருந்த கனமான இரும்பு பொருளை எடுத்து தந்தையின் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த தந்தை சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் நவீனை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த அன்று அதே வீட்டில் மேலும் இருவர் இருந்ததாகவும் அவர்களிடம் விசாரணை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது

தந்தை குறட்டை விட்டார் என்பதற்காக அவரது மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top