அதிர்ச்சி!! மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மருமகன்..!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த வடுகுபட்டி பகுதியில் வசித்து வருபவர்கள் சரண்யா – ரவிச்சந்திரன் தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் கணவன் மனையி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதால் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

அதே சமயம் தம்பதியினர் இருபவரும் விவகாரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ரவிச்சந்திரன் 2-வது மகள் தன்னுடன் இருக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்களே உஷார்!! 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!!

இத்தகைய தீர்ப்பானது ரவிச்சந்திரனுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனால் கடும் மன உளைச்சளுக்கு ஆளான ரவிச்சந்தின் இது குறித்து தனது மாமனாரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ரவிச்சந்தின் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாமனார் சைவராஜை சுட்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டுபோன சைவராஜ் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து துப்பாக்கியை பறுமுதல் செய்தனர்.

பிரபல நகைக்கடையில் கொள்ளை: மேலும் 2 பேர் கைது!!

அதோடு கொலையின் பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தகராறில் மாமனாரை மருமகன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.