Connect with us

கூலிப்படையை ஏவி மருமகன் கொலை: மாமியார் அதிரடி கைது!!

murder

தமிழகம்

கூலிப்படையை ஏவி மருமகன் கொலை: மாமியார் அதிரடி கைது!!

நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கூலிப்படையை ஏவி மருமகனை தீர்த்துக்கட்டிய சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மருமகனை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக கைதுசெய்யப்பட்டுள்ளார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

குறிப்பாக தனது மருமகன் சூரியா தினமும் மது அருந்திவிட்டு,  மருமகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுப்பட்டு வந்ததாக கூறியுள்ளார். இதன் காரணமாக மருமகனை தீர்த்துக்கட்ட முடிவு எடுத்ததாக மாமியார் சகுந்தலா கூறியுள்ளார்.

அதன் படி, கூலிப்படை வைத்து மருமகனை கொன்றதாக கைதான சகுந்தலா வாக்குமூலம் அளித்துள்ளார். கொலையில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top