Connect with us

இந்த காலத்தில் இப்படியும் ஒரு மகன்…அப்பா இறந்த அதிர்ச்சியில் மகன் இறப்பு!!

உயிரிழப்பு

தமிழகம்

இந்த காலத்தில் இப்படியும் ஒரு மகன்…அப்பா இறந்த அதிர்ச்சியில் மகன் இறப்பு!!

தற்போது நாம் பல இடங்களில் குடும்ப பிரச்சனைகளை செய்தியாக பார்க்கிறோம். ஏனென்றால் குடும்ப பிரச்சனைகள் கொலையில் முடிந்து விடும் சம்பவம் தமிழகத்தில் ஆங்காங்கே ஏற்படுகிறது.

இந்த ஒரு காலத்தில் தந்தை இறந்த நாளில் மகனும் இறந்துள்ள சம்பவம் அனைவர் இடையே பெரும் பாசத்தையும் கண்ணீரையும் உண்டாக்கியுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சேர்ந்தவர் ஐயப்பன் தற்போது 85 வயதான இவர் ESIயில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவருடைய மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். ஐயப்பனுக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் ராதாகிருஷ்ணனுக்கு 57 வயது ஆகிறது. இவர் நாகர்கோவிலில் தங்க நகை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

தந்தை மீது ராதாகிருஷ்ணன் அதிகம் பாசம் வைத்திருந்தார். தாயும் இறந்த சூழலில் தந்தை நேற்று முன்தினம்  ஐயப்பன் இறந்துவிட ராதாகிருஷ்ணன் கடும் வேதனை அடைந்துள்ளார்.

இறுதிச்சடங்கு  ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நிலையில் மயங்கி விழுந்து இறந்து போனார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே குடும்பத்தில் இறந்ததால் அந்த வீடு சோகத்தில் மூழ்கியது. உறவினர்கள் கடும் வேதனை அடைந்தனர். ஐயப்பனின் உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. ராதாகிருஷ்ணனின் உடல்  புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top