என்னது! மகன் கொலை செய்யவில்லையா? நடிகை வீணா கபூர் விளக்கம்!!

பாலிவுட்டில் மிகவும் பழம்பெரும் நடிகையாக இருப்பவர் நடிகை வீணா கபூர் ( வயது 74). இவர் சில தினங்களுக்கு முன் சொத்து பிரச்சனை காரணமாக அவரது மகன் அபிஷேக் சத்தா அடித்து கொலை செய்யப்பட்டதாக தகவல் இன்று வெளியானது.

இந்நிலையில் அபிஷேக் சத்தா , அவரது வீட்டு பணியாளர் சோட்டு ஆகியோரை கைது செய்துள்ளதாகவும், வீணா கபூர் உடல் ஆற்றில் தேடப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இத்தகைய தகவல் பாலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை கிளப்பியது.

இந்த சூழலில் பாலிவுட் நடிகை வீணா கபூர் உயிருடன் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதே பெயரில் மற்றொரு நடிகை அவரது மகனால் வீணா கபூர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இத்தகைய தகவல் பரவியதையடுத்து தனக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இரங்கல் தெரிவித்ததால் மிகுந்த வேதனை அடைந்ததாக கூறினார். அதே சமயம் தொடர்ச்சியாக தொலைப்பேசி அழைப்புகள் மற்றும் மெசேஜ் வந்ததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாக தெரிவித்தார்.

மேலும், அபிஷேக் சத்தா கூறுகையில் என் அம்மாவை கொலை செய்வதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்றும் இது போன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.