
பொழுதுபோக்கு
திருமணத்திற்கு முன் நயன்தாரா ஆசையா கேட்ட விஷயம் !! நடந்ததா.. இல்லையா ?..
தமிழ் சினிமாவின் முன்னணி காதல் ஜோடியாக வளம் வருவது இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா ஜோடிதான்.கடந்த 6 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வருகின்றவர்கள் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்கள் இருவரது குடும்பத்தினர் திருமணத்திற்கான வேலைகளை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கல்யாணத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா உடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்கும் காதல் மலர்ந்தது.இந்நிலையில் இவர்கள் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் மூலம் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இரண்டாவது முறையாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கியுள்ளார்
.இப்படம் வெளியாகி சிறந்த விமர்சனங்களை பெற்று நல்ல வசூலை தட்டியது.
நிஜ சுடுகாட்டில் நடு இரவில் தலைதெறிக்க ஓடிய பிரபல நடிகை!!..யார் தெரியுமா?..
நயன்தாரா -விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர் . சமீபத்தில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி அவர்கள் அதையடுத்து மகாபலிபுரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அங்குள்ள சிறப்புமிக்க சிற்பக் கலைகளை கண்டுகளித்துள்ளார்.அதன்பிறகு அங்குள்ள ரெஸ்டாரண்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு திரும்பி இருக்கிறார்கள்.
இதை அடுத்து, நேற்று முன் நாள் நயன் தனக்கு Local Food சாப்பிடனும் போல இருக்கு என கூற, உடனே விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் லோக்கல் உணவு கடைக்கு சென்று சாப்பிட்டுள்ளார்.அதனை வீடியோவாக பதிவிட்டு லோக்கல் உணவு மற்றும் காதலி இரண்டும் எப்பொழுதும் சூப்பரான காம்பினேஷன் என தெரிவித்துள்ள்ளார்.இந்த வீடியோவை தற்போது இவரது ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்
