சோமாலியாவில் பயங்கர கார் குண்டு வெடிப்பு- 8 பேர் உடல் சிதறி பலி

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா பல வருடங்களாக பஞ்சம், பசி , பட்டினி என்றுதான் போய்க்கொண்டிருக்கிறது.

இங்கு உள்ளூர் தீவிரவாத அமைப்புகளே அந்த நாடு முன்னேறாமல் இருப்பதற்குரிய அனைத்து விசயங்களையும் செய்கிறது.

அடிக்கடி குண்டு வைத்தல், தீவிரவாத தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.

இன்றும் சற்றுமுன் நடந்த தீவிரவாத தாக்குதலில் 8 பேர் உடல் சிதறி பலியாகினர்.

சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் அருகில் இருந்த மசூதியின் சுவர்களிலும் கடும் அதிர்வுகள்

தெரிந்ததாக  அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

மசூதியில் இருந்து அவர் வெளியே வந்து பார்த்த போது அப்பகுதியில்

இருந்த பழைய வீடுகள் இடிந்து விழுந்திருந்ததுடன், இறந்தவர்களின் உடல்பாகங்கள்  ஆங்காங்கே பார்க்க முடியாத வகையில் சிதறி கிடந்ததாக அவர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment