சோமாலியா நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பெண் உறுப்பு வழியாக துப்பாக்கி தோட்டா ஒன்று புகுந்ததை அடுத்து மருத்துவர்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்
சோமாலியா நாட்டில் உள்ள ஒரு பகுதியில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வானத்தை நோக்கி சென்ற துப்பாக்கி குண்டு ஒன்று ஒரு பெண் தங்கி இருந்த கூரை வழியாக புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் பெண்ணுறுப்புகள் புகுந்தது. இதையடுத்து அந்த பெண் காயத்தால் அலறிய நிலையில் அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் அவரை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது பெண் உறுப்பில் துப்பாக்கிக் குண்டு புகுந்திருக்கிறது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அந்த துப்பாக்கி குண்டை அகற்ற முடிவு செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்தனர்.
இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பின்னர் பெண் உறுப்பில் இருந்த துப்பாக்கி குண்டு வெளியே எடுக்கப்பட்டது. வானத்தை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி குண்டு தன் வேகத்தை இழந்து மெதுவான வேகத்தில் வந்து பெண் உறுப்பில் புகுந்ததாகவும் அதனால்தான் அந்த பெண்ணுக்கு மிகப்பெரிய காயம் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் சில நாட்களுக்கு மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பெண் இன்னும் ஒரு சில நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்கள் பார்வையில் இருப்பார் என்றும் அதன் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது
இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கல் கூறியபோத், ‘இதுவரை எங்களது மருத்துவ அனுபவத்தில் இப்படி ஒரு பிரச்சனையை சந்தித்துள்ளது இல்லை என்றும் பெண் உறுப்புக்குள் துப்பாக்கி குண்டு நுழைந்ததாக நாங்கள் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்றும் கூறினார். இருப்பினும் சிறப்பான முறையில் அந்த பெண்ணுக்கு எந்தவிதமான ஆபத்தும் இன்றி அறுவை சிகிச்சை செய்து துப்பாக்கி குண்டை வெளியே எடுத்த மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.