’டிக்கெட் டு ஃபினாலே’ குறித்து ஆரி பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சோம்!

b06e0c3acd8dae65007be17b5cca539f

’டிக்கெட் டு ஃபினாலே’ என்ற டாஸ்க்கை வென்று முதல் முதலாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தவர் சோம் என்பதும், இதனால் அவரை கமல்ஹாசன் உள்பட அனைவரும் பாராட்டினார்கள் என்பதும் தெரிந்ததே 

ஆனால் தற்போது ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் குறித்து ஆரி மற்றும் பாலாஜி பேசியது சோம் சேகரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த வீட்டில் 91 நாள் நான் சரியாக இருந்ததற்காக பைனல் போக வேண்டுமா? அல்லது இந்த ஒரு வாரம் மட்டும் ’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்கை சரியாக விளையாடி பைனல் போக வேண்டுமா என்ற கேள்வி என்னிடம் இருந்தது என்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஃபைனல் போக வேண்டுமென்று நான் விரும்பினேன் என்று ஆரி கூறினார். அப்படியெனில் சோம் மக்களை சந்திக்காமல் ஃபைனல் சென்றாரா என்ற வகையில் அவரது பேச்சு இருந்ததால் சோம் அதிர்ச்சி அடைந்தார்

221a582d3972556f187dcfd320764df3

அதே போல் தான் விளையாட்டை விளையாட்டாக தான் பார்த்ததாகவும் என்னை விமர்சனம் செய்தவர்களை பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அதைக் கேட்டு நான் மிகவும் என்ஜாய் செய்ததாகவும் பாலாஜி கூறினார்

’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் மூலம் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆரி மற்றும் பாலாஜியின் பேச்சை கேட்டதும், சோம் அதிர்ச்சியில் இருந்ததை புரமோ வீடியோவில் பார்க்க முடிந்தது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.