சுண்டலாச்சும் போடு… ரம்யாவிடம் கூறிய சோம்சேகர்!!!

9dd5cc1b7b6710c2625e8c2d91241771

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சிறந்த மனிதராக பலரது இதயங்களை பிடித்திருப்பவர் சோம். 

அவரது வளர்க்கும் செல்ல நாய் குட்டு பற்றி நம் அனைவருக்கும் தெரியும். காரணம்  அவர் பல இடங்களில் குட்டு வை பற்றி பேசியிருக்கிறார். கடிதம் எழுதச் சொன்னபோது கூட அவர் குட்டுவுக்கு தான் கடிதம் எழுதினார். இப்படி இளகிய மனம் படைத்தவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த பொழுது அவர் ரம்யா பாண்டியன் கொடுத்த சாக்லேட்டை வைத்திருந்ததற்காக அவரது நண்பர்கள் அவரை செல்லமாக கிண்டல் செய்து வந்தனர். இந்த விஷயம் நம் அனைவருக்கும் தெரியும். 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஐந்தாம் இடத்தை பிடித்து வெளியேறினார். அறிமுகம் இல்லாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அவர் பைனல்ஸ வரை வந்தது மிகவும் பெரிய விஷயம் என்று ரசிகர்கள் அவரைப் பாராட்டி வந்தனர். 

அதுவும் டிக்கெட் டு பினாலேவில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து முதலிடத்தை பிடித்து நேரடியாக பைனல்ஸ் வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  அவர் தற்போது தனது இன்ஸ்ட்டாகிராமில் பிக்பாஸ் நண்பர்களுடன் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார். 

அதிலும் முக்கியமாக ரம்யா பாண்டியனும் அவரும் அந்த சாக்லேட்டும் இருப்பதுபோல கார்ட்டூன் ஒன்றையும், பின்பு ஒருமுறை அவர் ரம்யாவிடம் “கடலை அதான் போட முடியலை சுண்டலாவது போடு” என்று கூறிய அந்த வாசகம் அடங்கிய ஒரு கார்ட்டூனையும் அவர் தற்போது பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.