உக்ரைன் மீதான தாக்குதல் ரஷ்யாவில் தீவிரமடைந்து வரும் நிலையில் ரத்ததுளிகளோடு சில கண்ணீர்துளிகளும் அரங்கேறியது காண்போரை கண்கலங்க வைத்தது.
உக்ரைன் மீது ரஷ்யா இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் சூழலில் 18 முதல் 60 வயது ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடைவிதித்துள்ளது. போர்களத்தில் தந்தையை விட்டுச்செல்லாத மகளும் குடும்பத்தை பிரிந்து யுத்தகளத்திற்கு செல்லும் தந்தையும் கண்ணீர் பெறுக விடைப்பெற்றனர்.
எளியோர்கள் மட்டும் இன்றி ராணுவ வீரர்களும் கண்ணீருடன் களத்தில் இறங்கினர். காதலியிடம் அன்பு முத்ததை நினைவாக கொடுத்து விட்டு யுத்தவீரநடைப்போட்டனர்.
ஆயுதம் ஏந்திய ரஷ்ய ராணுவ வீரரிடம் துணிச்சலோடு பெண் ஒருவர் தனியாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். உக்ரைன் நாட்டு தேசிய மலரான சூரியகாந்தி விதைகளை அவரிடம் கொடுத்து அந்த பெண் நீங்கள் விழுப்போது எங்கள் தேசியமலர் உதயமாகும் என்று முழக்கமிட்டார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் குண்டுவெடிப்பு சத்ததின் நடுவே காதல்ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு மே 6- ஆம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த நிலையில் அதுரையில் உயிரோடு இருப்போமா என்ற அச்சத்தில் தற்போது திருமணம் செய்து கொண்ட சம்பவம் காண்போரை கலங்க வைக்கிறது.