Connect with us

இனி சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி மண் எடுக்கலாம்!!

News

இனி சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி மண் எடுக்கலாம்!!

4fcb9db93843e51ba2c118730b9b25b7

தற்போது நம் தமிழகத்தில் பல தொழில்கள் நலிவடைந்து நிலையில் காணப்படுகின்றன அதுவும் குறிப்பாக நெசவுத் துறையானது மிகவும் நலிவடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல துறைகளும் தற்போது நலிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக மண்பானைகளில் உற்பத்தியானது தற்போது தமிழகத்தில் மிகவும் பாதிப்பில் காணப்படுகிறது. மேலும் குளிரூட்டிகள் ஃப்ரிட்ஜ் போன்ற நவீன கண்டுபிடித்து காரணமாக மண்பானையின் பயன்பாடு படிப்படியாக குறைந்து காணப்படுகிறது.1df3b1a1e5ad18f3657f8d97d2142231

 இந்த நிலையில் அவர்கள் மண்ணெடுத்து பானைகள் தயாரிக்க சுற்றுச்சூழல் துறையிடம் பெறவேண்டுமென்று இருந்த நிலையில் தற்போது அவை ரத்து செய்யப்பட்டுள்ளது.அரசாணையில் திருத்தம் செய்து மண் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கப்பட்டது.  அதன்படி செங்கல் சூளை வைத்திருப்போர்,மண்பாண்ட தொழிலாளர் இனி சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி இன்றி மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1.5 மீட்டர்  ஆழம் வரை மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உரிய கட்டணத்தைச் செலுத்தி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று எடுக்கலாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. மண் எடுக்கும் இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை தேவை என்றும் கூறியுள்ளது. கிராமப்புறங்களில் இருந்து 10 மீட்டர், தேசிய நெடுஞ்சாலை நீர்நிலைகளில் இருந்து 50 மீட்டர் வரையிலும் மண் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உரிய விதிகளை பின்பற்றி மண் எடுக்கிறார்களா? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top