சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மானின் பிறந்த நாள்

தமிழ் சினிமாவில் மூடுபனி படத்திலேயே இசையமைப்பாளர் இளையராஜாவிடம் கீ ஃபோர்டு ப்ளேயராக வேலை செய்தவர் ஏ.ஆர் ரஹ்மான் அதன் பிறகு கமல் நடித்த புன்னகை மன்னன் படத்திலும் பணியாற்றினார்.

இவர் மறைந்த மலையாள இசையமைப்பாளர் ஆர்.கே சேகரின் மகனாவார்.

ரோஜா படத்துக்கு முன்பு புகழ்பெற்ற லியோ காபி விளம்பரம் உள்ளிட்ட பல புகழ்பெற்ற விளம்பரங்களுக்கு இசையமைத்தார்.

இவரின் திறமையை பார்த்த இயக்குனர் பாலச்சந்தர் கவிதாலயா  தயாரிப்பில் வந்த ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தினார்.

முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார் இதனால் புகழடைந்தார் அந்த நேரத்தில் வெளியான மே மாதம், வண்டிச்சோலை சின்ராசு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றார்.

இதில் இவரின் பாடல்களும் டாப் ஆக போனது ஜென் டில் மேன், இந்தியன், காதலன் என தனது அடுத்தடுத்த படங்களில் தனது முத்திரையை இவர் பதித்தார்.

2008ம் ஆண்டு ஆங்கிலத்தில் தயாரான ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்கு இவருக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.

அதன் பின் ஏற முடியாத புகழேணியின் உச்சியை தொட்டார் தற்போது உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளராக உள்ளார்.

இன்று இவரின் பிறந்த நாளையொட்டி அவரின் ரசிகர்கள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரை பற்றிய தகவல்களை அள்ளி தெளித்து அவரை புகழ்ந்து போஸ்ட் போட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment