இவ்ளோ பரிதாபமான வாழ்க்கையா.. சோஷியல் மீடியாவால் பிரபலமான பிஜிலி ரமேஷின் நிலை!

கடந்த சில ஆண்டுகளாகவே மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களின் செயல்பாடுகள் பரவலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக நம்மைச் சுற்றி என்ன விஷயம் நடந்தாலும் அது மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகவும் இணையதளங்களில் மாறுகிறது. அது மட்டுமில்லாமல் முன் பின் தெரியாத சில நபர்கள் ஏதாவது வித்தியாசமாக செய்யும் பட்ச்சதில் கூட அது இணையத்தில் வேகமாக பரவி அவர்களுக்கான ஒரு கூட்டத்தையும் வேகமாக உருவாக்கி விடும்.

அந்த வரிசையில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல தளங்களில் நடனம் ஆடுவது, தன் நடிப்பு திறமை வெளிப்படுத்துவது என எதைச் செய்தாலும் அதை மக்கள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அந்த வரிசையில் சமூக வலைத்தளம் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி சினிமாவிலும் வாய்ப்புகளை பெற்றவர் தான் பிஜிலி ரமேஷ்.

சென்னையை சேர்ந்த இவர் நடந்து சென்ற போது ஃபன் பண்றோம் என்ற நிகழ்ச்சியில் இருந்தவர்கள் அவரை பிராங்க் செய்ய, அதில் அவர் செய்த விஷயங்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதன் காரணமாக, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார் பிஜிலி ரமேஷ்.

அடுத்தடுத்து நிறைய படங்களில் சின்ன சின்ன காமெடி காதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் பிஜிலிக்கு கிடைத்திருந்தது. இதே போல தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்கள் என அதிகம் பிசியாகவும் இருந்து வந்தார். இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் தனக்கு கிடைத்த புகழை கொண்டு சினிமாவில் பெரிய ஆளாக பிஜிலி ரமேஷ் வருவார் என்று தான் அனைவருமே கருதினர். ஆனால், திடீரென நீண்ட காலமாக எந்த இடத்திலும் பிஜிலி ரமேஷை பார்க்க முடியாமல் போக அவருக்கு என்ன ஆனது என்பது தான் பலரின் கேள்வியாகவும் இருந்து வந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் நேர்காணல் அளித்த பேட்டி ஒன்றில் பிஜிலி ரமேஷ், தன்னை பற்றியும் தனது குடும்பத்தின் நிலை பற்றியும் தெரிவித்த கருத்துக்கள் கடும் அதிர்ச்சியை இணையவாசிகள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக சில தினங்கள் முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிஜிலி ரமேஷ் தொடர்பான செய்திகள் வந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு நேர்காணலில் பேசியுள்ள பிஜிலி ரமேஷ், “சினிமாவில் சம்பாதித்ததை நான் குடித்தே அழித்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் லட்சக்கணக்கில் பணம் ஒன்றும் நான் சம்பாதிக்கவில்லை. குக் வித் கோமாளியில் 15 ஆயிரம் ரூபாயும், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் 13 ஆயிரமும், கோலமாவு கோகிலா ப்ரோமோவில் தான் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை வாங்கினேன்” என பிஜிலி ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பிஜிலி ரமேஷ் Photos & Images # 1291 - Filmibeat Tamil

இதே போல, மற்ற படங்களில் 5,000 ரூபாய் வரைக்கு மட்டுமே தான் வாங்கியதாகவும், அப்படி சேர்க்கும் பணத்தை கொண்டு என்ன செய்து விட முடியும் என்றும் கேள்வி எழுப்பும் பிஜிலி ரமேஷ், தான் என்றோ சம்பாதித்ததை தற்போது வரை சொல்லிக் காட்டுவதாகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். சினிமாவில் பிரபலமாக இருப்பவர்களை வெளியில் இருந்து பார்க்கும் போது பெரிதாக தெரிந்தாலும் அவரின் நிலையில் இருந்து பார்க்கும் போது தான் உண்மையும் புரிகிறது.

இதே போல, குடி பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பிஜிலி ரமேஷ், ரஜினியின் பேச்சைக் கேட்டு தற்போது குடி பழக்கத்தை நிறுத்தி சந்தோசமாக வாழ்ந்து வருவதாகவும் கூறி உள்ளார். மேலும் தன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது கேன்சர் வந்ததாக பரவிய தகவல் வதந்தி என்றும் விளக்கம் கொடுத்துள்ளார் பிஜிலி ரமேஷ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.