சமூகநீதி கண்காணிப்பு குழு தலைவராக சுப.வீரபாண்டியன் நியமனம்;

நம் தமிழகத்தில் தற்போது முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின்.  அவர் தமிழகத்தில் முதன் முறையாக முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. இன்றைய தினம் காலை முதலே தமிழகத்தில் அவரைப் பற்றிய பரபரப்பான செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமாக இருந்தது.ஸ்டாலின்

காலை அரசு பஸ்சில் சோதனை, அதன் பின்னரும் தடுப்பூசி முகாம் ஆய்வு, பின்னர் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை இப்படி காலையில் அடுத்தடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பற்றிய செய்திகள் வந்த வண்ணமாக இருந்தன.

இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமூகநீதி கண்காணிப்பு குழு தலைவராக சுப.வீரபாண்டியனை நியமித்தார். இந்தக் குழுவில் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தனவேல் உள்பட 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமூகநீதி கண்காணிப்பு குழுவில் பேராசிரியர் சுவாமிநாதன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஜெய்சன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர் ஆர்.ராஜேந்திரன், கருணாநிதி ஆகியோரும் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமூகநீதி அளவுகோல் முறை பின்பற்றப்படுகிறதா? என குழு கண்காணித்து அரசு அவ்வப்போது பரிந்துரைக்கும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment