வித்தியாசமான போராட்டம் நடத்திய சமூகநீதி கூட்டமைப்பினர்…!

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி தலை மீது பூசணிக்காயை வைத்துக்கொண்டு ஒசூர் தாலூகா அலுவலகத்தில் மனு அளித்த சமூகநீதி கூட்டமைப்பினர்……

சமூகநீதி கூட்டமைப்பினர் ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தலை மீது பூசணிக்காயை வைத்துக்கொண்டு வந்தனர்

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரியும்,மத்திய அரசை கண்டிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பிய இவர்கள், வறுமையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை, 50% அதிகமாக இட ஒதுக்கீடு வழங்க கூடாது என்கிற நிலையில்

10.5% இட ஒதுக்கீடு என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக உள்ளதெனவும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பூசணிக்காய் தலை மீது எடுத்து வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment