வாசனைக்கே நாக்கில் எச்சில் ஊறும் மொச்சை காரக்குழம்பு ! வீட்டிலே ட்ரை பண்ணி பாருங்க!

மொச்சை காரக்குழம்பு இந்த முறையில் வீட்டில் செய்து பார்க்கலாமா…

தேவையான பொருள்கள்

மொச்சை – அரை கப்,
சின்ன வெங்காயம் – அரை கப்,
பூண்டு – அரை கப்,
புளி – எலுமிச்சை அளவு,
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி,
தனியாதூள் – ஒரு தேக்கரண்டி,
சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி,
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு,
தாளிக்க:, கடுகு – அரை தேக்கரண்டி,
வெந்தயம் – அரை தேக்கரண்டி,
சீரகம் – கால் தேக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய் – தேவைக்கு,
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு,
தக்காளி – 4

பூஜை மணியில் இவ்வளவு ஆன்மிக தகவல் இருக்குதா? மிஸ் பண்ணிடாதீங்க!

செய்முறை

மொச்சையை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்து, சிறிது உப்பு முக்கால் அளவு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்

தக்காளி, மல்லித்தழை, கறிவேப்பிலை, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம், பூண்டு நன்கு வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

இதனுடன் மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்.பின்னர் புளி தண்ணீர், சிறிது உப்பு, வேக வைத்த மொச்சை சேர்த்து நன்கு பச்சைவாசனை போக கொதிக்க விட்டு இறக்குங்கள்

தீபாவளிக்கு குட்டீஸ்க்குப் பிடிச்ச தித்திப்பான அதிரசம் செய்வது எப்படி?

சுவையான மொச்சைக் குழம்பு ரெடி. தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை அரைத்து சேர்ப்பதால் வழக்கமான கார குழம்பைவிட வித்தியாசமான சுவையில் இருக்கும். சாதத்துடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews