அடேங்கப்பா இவ்வளவு கட்டுப்பாடா இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு? 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி!

தமிழர்கள் என்றாலே வீரமிக்க குணமுடையவர்கள் என்றுதான் இந்தியாவில் உள்ள அனைவரும் கருதுகின்றனர். அவர்கள் செயல்களை மட்டுமில்லாமல் பொழுதுபோக்கில் வீரத்தையே மையமாக காணப்படுவர். தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு ஆகும்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு நடத்த வேண்டும் என்று மெரினாவில் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த இந்த ஆண்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்கள் பங்கேற்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

150 பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இருக்கையில் 50% என்ற எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடை பிடிப்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது வேண்டும் என்றும் கூறியுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று மற்றும் கோவிட் நெகட்டிவ் என்ற சான்றிதழும் கட்டாயம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் மாடுபிடி வீரர்கள் அடையாள அட்டை பெற வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. காளையுடன் உரிமையாளர், உதவியாளர் என இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உரிமையாளர் உதவியாளர் என இருவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி சான்று மற்றும் கோவிட் நெகட்டிவ் என்ற சான்று அவசியம் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment