சத்தமே இல்லாமல் துணை மேயர் பதவியை வாங்கிய திருப்தி! இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இத்தனை பதவிகளா?

தமிழகத்தில் நேற்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் நாளைய தினம் தமிழகத்தில் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே பதவி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் துணை மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பதவிகள் ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி, கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பவானி, புளியங்குடி, போடி, அதிராம்பட்டினம் நகராட்சித் துணைத் தலைவர் பதவிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர் ஆகிய பேரூராட்சி தலைவர் பதவிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளி, கூத்தைப்பார், மேலசொக்கநாதபுரம், கீரமங்கலம், சேத்தூர், ஜம்பையில் பேரூராட்சி துணை தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment