Connect with us

இந்த பொங்கலுக்கு அரசு பேருந்தில் இவ்வளவு பேர் பயணம் செய்தார்களா? 100 கோடிக்கும் அதிகமான வருவாய்!

பேருந்து

செய்திகள்

இந்த பொங்கலுக்கு அரசு பேருந்தில் இவ்வளவு பேர் பயணம் செய்தார்களா? 100 கோடிக்கும் அதிகமான வருவாய்!

இந்த பொங்கலுக்கு அரசு பேருந்தில் இவ்வளவு பேர் பயணம் செய்தார்களா? 100 கோடிக்கும் அதிகமான வருவாய்!

தமிழ்நாட்டில் தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனை தமிழர் திருநாள் என்றும் அழைப்பர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் தமிழர் திருநாளை கொண்டாடுவதற்காக வெளியூர், வெளிநாடுகளில் வாழும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு விரைந்து சென்றனர். அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் பொங்கலால் போக்குவரத்து துறைக்கு 100 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். அதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி  தமிழக போக்குவரத்துத் துறைக்கு ரூபாய் 138.07 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

பொங்கலுக்காக தமிழகம் முழுவதும் சுமார் 7 கோடி பயணிகள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். 2021ஆம் ஆண்டை விட ஒரு கோடியே 7 லட்சம் பயணிகள் கூடுதலாக அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

பொங்கல் திருநாளன்று மதுபானக் கடைகளிலும் 300 கோடிக்கு அதிகமாக வியாபாரம் நடந்தது குறிப்பிடத்தக்கது. பொங்கலால் தமிழக அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top