என்னது இவ்வளவு பேர் கொரோனா தடுப்பூசி போட்டு இறந்து விட்டார்களா? மாநிலங்களவையில் ஒன்றிய அரசு!

உலகிற்கு முன்னோடியாக நம் இந்தியத் திருநாடு விளங்குகிறது. ஏனென்றால் நூறு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் சீனா உள்ளது.

தடுப்பூசி

இதனால் இந்தியா சில மாதங்களிலேயே நூறு கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை புரிந்துள்ளது. இவை நாளுக்கு நாள் தடுப்பூசிகளை செலுத்தி கொள்தல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் உறுப்பினர் ஒருவர் கொரோனா  தடுப்பூசி செலுத்தியதால் இறந்தவர்கள், தடுப்பூசி பின் விளைவு பற்றி கேள்வி கேட்டார். அதற்கு மாநிலங்களவையில் ஒன்றிய அரசு பதிலை தாக்கல் செய்தது.

அதன்படி நம் இந்திய நாடு முழுவதும் இதுவரை 123.25 கோடி பேருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு கூறியது. அதோடு இந்த கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் 49000 பேருக்கு எதிர்விளைவு ஏற்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையில் தகவல் வெளியானது.

குறிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு 946 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒன்றிய அரசு கூறியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment