என்னது!! +2 தேர்வில் முதல் நாளில் இத்தனைபேர் ஆப்சென்டா..?

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10,11, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது.

இதனால் நடப்பாண்டிலும் பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து.

இதற்கான செய்முறைத்தேர்வுகளும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகமெங்கும் பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.

இந்நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு தொடங்கிய முதல் நாளில், 32,674 பேர் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல்கல் வெளியாகியுள்ளன.

மேலும், 8.22 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், 32,674 மாணவர்கள் ஆப்சென்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment