ஒரே நாளில் இத்தனை படங்களா? கோலிவுட்டை அதிரவைத்த சிறிய பட்ஜெட் படங்கள்…..!

இதுவரை தமிழ் சினிமாவில் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று படங்கள் வெளியாகி பார்த்திருப்போம். ஆனால் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி பார்த்திருக்கிறீர்களா? வருடத்தின் இறுதி நாளான நேற்று தான் அதாவது டிசம்பர் 31ல் இத்தனை படங்கள் வெளியாகியுள்ளன. அத்தனையும் லோ பட்ஜெட் படங்கள்.

கடந்தாண்டு கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் பல படங்கள் வெளியாகாமல் முடங்கியது. எனவே இந்தாண்டும் ஊரடங்கு போட்டுவிட்டால் என்ன செய்வது என பயந்து அத்தனை படங்களையும் வெளியிட்டு விட்டார்களோ என்னமோ. தற்போது அந்த படங்களின் பட்டியலை காணலாம்.

இந்த வருடத்தின் முதல் நாளும் வெள்ளிக்கிழமை தான் வருடத்தின் கடைசி நாளும் வெள்ளிக்கிழமை தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நேற்று மட்டும் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்களையும் சேர்த்து இந்த வருடத்தில் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை மொத்தம் 138.

ஓடிடி தளங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 42. மொத்தமாக இந்தாண்டு மட்டும் சுமார் 180 படங்கள் வெளியாகி உள்ளன. சரி தற்போது நேற்று தமிழில் வெளியான படங்களின் பட்டியலை பார்க்கலாம். அதன்படி பிளான் பண்ணி பண்ணனும், வேலன், தண்ணி வண்டி, தீர்ப்புகள் விற்கப்படும், சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை, காட்டுப்புறா, சில்லாட்டா, ஈபிகோ 302 ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

இதுதவிர, சிட்டிசன் பட இயக்குனர் சரவண சுப்பையா இயக்கியுள்ள மீண்டும், கரையேறும் கனவுகள், தமிழ் ராக்கர்ஸ், ஓணான், ஒபாமா உங்களுக்காக, லேபர், ஆகிய படங்களும் திரைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவை அத்தனையும் லோ பட்ஜெட் படங்கள். ஆனால் இவை வந்த சுவடே தெரியவில்லை. ஏதோ நாங்களும் படத்தை வெளியிட்டோம் என்று கணக்கிற்காக வெளியிட்டதுபோல் தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment