Connect with us

4 நாட்களில் இவ்வளவு பைக் ரேஸ்ஸா? எத்தனை பேர் கைதுன்னு தெரியுமா?

bike race

செய்திகள்

4 நாட்களில் இவ்வளவு பைக் ரேஸ்ஸா? எத்தனை பேர் கைதுன்னு தெரியுமா?

4 நாட்களில் இவ்வளவு பைக் ரேஸ்ஸா? எத்தனை பேர் கைதுன்னு தெரியுமா?

தமிழகத்தில் இரவு நேரங்களில் அதிக அளவு பைக் சாகசங்கள் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். பல நேரங்களில் பைக் சாகசங்களின் காரணமாக விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

அதுவும் குறிப்பாக தலைநகர் சென்னையில் அதிக அளவு சாலைகளில் இரவு நேரங்களில் பைக் ரேஸ் நடத்தப்படுகிறது. குறிப்பாக நேற்றைய தினம் மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை தகவல் அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

பைக் ரேஸ் சாகசத்தில் ஈடுபட்டதாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பைக் ரேஸில் 3 இளஞ்சிறார்களும் பிடிபட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top