
தமிழகம்
பொதுக்குழு கூட்டத்திற்கு இவ்வளவு தாமதமா? இதுவே காரணமாகுமா?
அதிமுக கழகத்தில் தற்போது பெறும் முக்கியமான நாளாக இன்று மாறியுள்ளது. ஏனென்றால் இன்றைய தினம் அதிமுகவில் பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழ உள்ளதாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக தலைமை பொறுப்பு யாருக்கு என்பது இன்றைய தினம் முடிவாக உள்ளதாக தெரிகிறது.
மேலும் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் ஸ்ரீவாரு மண்டபம் சென்னையில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் வரிசையாக வந்து கொண்டுள்ளனர்.
மேலும் மண்டபத்தில் முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்து உள்ளனர். அவர்கள் மண்டபத்தில் இருந்து ஒற்றை தலைமை வேண்டும், இரட்டை தலைமை வேண்டாம் என்று முழக்கமிட்டு வந்தனர். இந்த நிலையில் அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தற்போது மண்டபத்திற்குள் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்துக்கு வந்தடைந்தார் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் முதலில் வந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார் எடப்பாடி பழனிசாமி.
காலை சுமார் எட்டு மணிக்கு பசுமை வழி சாலை இல்லத்திலிருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி தற்போது வந்தடைந்துள்ளார்.
