இதுவரை உக்ரைனில் இருந்து 60 லட்சம் பேர் வெளியேறினர்-ஐ.நா. அமைப்பு;

உக்ரைனில் பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் உத்தரவினை அறிவித்தது. இதன் விளைவாக உக்ரைன் நாட்டிலுள்ள பல பகுதிகளை ரஷ்ய ராணுவத்தினர் சேதப்படுத்தி கொண்டு வருகின்றனர்.

மேலும் அங்குள்ள மக்களை ஒரு சில இடங்களில் சித்திரவதை செய்து கொலை செய்வதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பரவிக் கொண்டு வருகிறது. இதனால் நாட்டில் வாழும் மக்கள் அண்டை நாடுகளுக்கு கைதிகளாக தப்பிச் செல்கின்றனர்.

அந்த வகையில் இதுவரை உக்ரைன் நாட்டிலிருந்து அந்நாட்டு மக்கள் 60 லட்சம் பேர் வெளியேறி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய போர் காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 60 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

60 லட்சம்  பேரில் பெரும்பாலானவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த 60 லட்சம் பேரில் 90 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐநா அமைப்பு தகவல் அளித்துள்ளது.

18 முதல் 60 வயது வரையிலான ஆண்கள் உக்ரைனில்  இருந்து வெளியேற முடியாத நிலையில் உள்ளது என்பது வேதனையான ஒன்றாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment