Connect with us

இதுவரை 40 பேர் பாதிப்பு! “டெல்டா பிளஸ் கொரோனா”- மத்திய அரசு அறிவுறுத்தல்;

News

இதுவரை 40 பேர் பாதிப்பு! “டெல்டா பிளஸ் கொரோனா”- மத்திய அரசு அறிவுறுத்தல்;

b6c2e277f563c0ff9cc234e074e6361f

தற்போது இந்திய மக்களிடம் அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தை என்றால் அதனை கொரோனா என்றே கூறலாம். அந்தப்படி கொரோனா  பாதிப்பானது இந்தியாவில் அதிகமாக காணப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு இந்தியாவில் வர தொடங்கி கடந்த ஆண்டு இறுதியில் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மீண்டும் இந்த கொரோனா  நோயானது இந்தியாவில் மீண்டும் பரவ தொடங்கியது. இதனால் மக்கள் மீண்டும் ஊரடங்கு என்ற காலகட்டத்திற்குள் தங்களை முடக்கி கொண்டனர்.view-of-a-coronavirus-covid-19-background-3d-rendering

இதனால் பலரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டது. மேலும் முந்தைய கொரோனாவை காட்டிலும் தற்போது நிலவி வரும் கொரோனா  பாதிப்பானது மிகுந்த உயிரிழப்புகளை உருவாக்கியது. ஆனால் தற்போது இந்த கொரோனா நோயானது படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆயினும் இதனை மூன்றாவது கொரோனா  டெல்டா ப்ளஸ் என்ற பெயரில் வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மூன்றாவது கொரோனாவானது குழந்தைகளை குறிவைத்து தாக்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது இந்த டெல்டா ப்ளஸ் கொரோனா பற்றி மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி இந்த டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் கேரளா மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். மேலும் டெல்டா ப்ளஸ் கொரோனா  வைரசால் இந்தியாவில் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. கேரளாவில் பாலக்காடு, பதனம்திட்ட மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top