ரஷ்யாவின் பயங்கரவாத தாக்குதல்; இதுவரை 352 உக்ரைனிய மக்கள் உயிரிழப்பு!

ஐந்து நாட்களாக ரஷ்யா, உக்ரைன் மீது உக்கிரமாக போர் தொடுத்துக் கொண்டு வருகிறது. இதனால் உக்ரைனில் நாளுக்குநாள் பதற்றமான நிலைமை நிலவுகிறது. அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரு நாட்டு அரசுகளும் மாறி மாறி தகர்க்கப்பட்ட ராணுவ படை மற்றும் ராணுவ வீரர்களின் உயிர் இழப்பை மட்டுமே அறிவித்து வந்தது. பொது மக்களின் உயிரிழப்பு பற்றி எந்த ஒரு நாடும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் பலருக்கும் கேள்விக்குறியாக காணப்பட்டது.

இதனால் உக்ரைன் நாட்டில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் பேசப்பட்டது.  இந்த நிலையில் ரஷ்யாவின் கடுமையான தாக்குதலில் உக்ரேனிய பொதுமக்கள் 352 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ரஷ்யாவுடனான போரில் பொதுமக்கள் 352 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தகவல் அளித்துள்ளது. ரஷ்யா தாக்குதலில் 14 குழந்தைகள் உட்பட 352 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 116 குழந்தைகள் உட்பட ஆயிரத்து 654 பேர் படுகாயமடைந்துள்ளதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment