Entertainment
பச்சோந்தி என்று சொல்லியதற்கு இவ்வளவு கோபமா?
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்காக நேரடியாக நாமினேட் செய்யப்பட்டார் கவின் என்பதை அறிவித்துவிட்டு, உங்களை நீங்களே ஏன் நாமினேட் செய்தீர்கள் என்று காரணம் கேட்டார்.
தலையணை டாஸ்க்கில் தனக்கு தைக்க தெரியாது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்றார். நான் செய்திருந்தால் ஒருவேளை ஜெயித்திருக்கலாம் என்பதாலேயே தன் பெயரைக் கூறியதாகக் கூறினார்.
அதன்பின்னர் லாஸ்லியாவினை டார்கெட் செய்த கமல் ஹாசன் பட்டப்பெயர் கொடுத்ததற்கு ஏன் இவ்வளவு கோபம் என்று கேட்டார்.

மரியாதை என்பது வயதிற்கு கொடுக்கப்படவில்லை என்றாலும், குறைந்தபட்சம் சபை நாகரீகம் கருதியிருக்க வேண்டும் என்றார். பிடிக்கவில்லை என்பதற்கு, தூக்கி எறிதல் மட்டுமே ஒரு தீர்வு கிடையாது. வெளியே வந்து பார்த்தால்தான் தெரியும், இதைத்தான் பேசுகிறார்களா? இல்லை இதைவிட அதிகம் பேசுகிறார்களா என்று சொல்ல, லாஸ்லியா முகம் சுருங்கிப் போனது.
லாஸ்லியாவிற்கு இப்போதாவது புரிந்திருக்கும் தான் செய்தது எவ்வளவு தவறு என்று பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.
மேலும் இந்த டாஸ்க்கில் முகென், தர்ஷன் இருவருமே சண்டையிடாமல், போட்டியை போட்டியாகவே விளையாடினர் என்று பாராட்டு தெரிவித்தனர்.
