‘உனக்காக எல்லாம் உனக்காக’-நிரூப் செய்த வேலையால் ஆத்திரமடைந்த சினேகன்!

தமிழக ரசிகர்களை ஒட்டுமொத்தமாக தன்வசம் படுத்தியுள்ளது பிக்பாஸ் அல்டிமேட். இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து பிக் பாஸ் சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களை உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் அபினய் மற்றும் சாரிக் ஆகிய இருவர் எலிமினேட் ஆகி வெளியே சென்றனர். இந்த நிலையில் இன்று தாமரை மற்றும் பாலாவிற்கு போட்டி நடத்தப்பட்டது. அதன்படி இது உனக்காக எல்லாம் உனக்காக என்ற தலைப்பில் டாஸ்கை கொடுத்தது பிக்பாஸ்.

இதில் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து யாரும் பார்க்காத நேரத்தில் எதிரணியின் குழந்தையை தூக்கிக் கொண்டு போக வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் ரூலை பிரேக் செய்து நிரூப் குழந்தை பொம்மையை தூக்கினார்.

இதனால் பலரும் ஆத்திரம் அடைந்தனர். அதன்பின்னர் சினேகன் நாங்களும் குழந்தையை தூக்கிட்டோம் என்று தொட்டிலில் இருந்த குழந்தை பொம்மையை கேமரா முன் காட்டி அதை எறிந்தார். இதனால் பிக்பாஸ் குடும்பத்தில் பெரும் சண்டை வாரம் முதலிலேயே தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment