கேரளாவில் புகழ்பெற்ற பாரம்பரிய படகு போட்டி 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் ஆலப்புலா மாவட்டத்தில் உள்ள புன்னமடா ஏரியில் நடைபெறும் பாம்பு உலக புகழ்பெற்றதாககும். கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக படகு போட்டிகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் கலைகட்டியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 68-வது நேரு கோப்பைகான போட்டி நேற்று நடைப்பெற்ற நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் படகு போட்டியை தொடங்கிவைத்தார். இந்நிலையில் 150 நீளமுள்ள படகுகளை மின்னல் வேகத்தில் வீரர்கள் இயக்கி வந்தனர்.
அதே போல் 50-க்கும் மேற்பட்ட படகுகள் போட்டிகளில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதன் படி, ஒவ்வொரு சுற்றிலும் நான்கு படகுகள் என பல சுற்றுகள் நடத்தப்பட்டது. அப்போது மகாதேவி காடு பாம்பு படகு குழு முதல் பரிசை தட்டிச்சென்றது.
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற படகு போட்டியில் ஏராளமானோர் பங்கேற்று கண்டு ரசித்தனர். மேலும், சுமார் ரூ.40 லட்சம் ரூபாய்க்கு மேலாக படகு போட்டி டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.