பாம்பு கடிச்சிடுச்சி சார்.. அதான் பாம்போட வந்துட்டேன்!!

தன்னை பாம்பு தீண்டி விட்டதாக கூறி கையோடு பாம்பை மருத்துவமனைக்கு கொண்டுவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாலகிருஷ்ணன் நகரில் வசித்துவருபவர் தர்மன் .கூலி வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தர்மன் தனது வீட்டில் மது போதையில் இருக்கும் போது சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு அவரை தீண்டியது.

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் தருமன் தன்னை கடித்த பாம்பை கையோடு எடுத்துக் கொண்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இந்த பாம்பை கண்ட நோயாளிகள் பதறிபோய் சிதறி ஓடினர். ஆனால் தருமன் மருத்துவரை நோக்கி சென்ற போது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பதறிபோனார்கள்.

அவரை கடித்த பாம்பு விஷமற்ற பாம்பு என்பதால் அதற்கு ஏற்ப மருந்து மற்றும் மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுத்து அனுப்பினார்.

சிகிச்சை பெற்றும் அந்த பாம்பை விடாத தர்மன் பார்சல் கட்டி எடுத்து போன சம்பவம் என்னடா இது யாரு இவன் எனபது போல அமைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment