Connect with us

தீண்டாமையால் சிறுவர்களுக்கு திண்பண்டம் கொடுக்க முடியாது… ஒருவர் கைது..!!

202112131543529179 Tamil News Tamil News Vembakottai near alcohol sales arrest SECVPF

தமிழகம்

தீண்டாமையால் சிறுவர்களுக்கு திண்பண்டம் கொடுக்க முடியாது… ஒருவர் கைது..!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் இருக்கும் பாஞ்சாகுளம் என்ற கிராமத்தில் பட்டியலின குழந்தைகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் குழந்தைகள் ஒரு கடையில் சென்று தேன் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்களை வாங்க சென்றனர். அப்போது கடையில் இருந்தவர் நீங்கள் ஸ்கூலுக்கு போங்க என்றும் உங்களுக்கு திண்பண்டங்கள் வழங்க முடியாது என கூறியுள்ளார்.

இருப்பினும் குழந்தைகள் கடையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஊரில் கட்டுப்பாடு போட்டுள்ளதாகவும், இதனால் உங்களுக்கு திண்பண்டங்கள் கொடுக்கக் கூடாது என கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் குழந்தையுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் தீண்டாமை கொடுமை விவகாரத்தை ராமச்சந்திர மூர்த்தி (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top