ஒரே ஒரு சிகரெட்டால் மெத்தை தீப்பற்றி, தனது உயிரை பறிகொடுத்த இளைஞர்!!

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று அனைத்து பகுதிகளிலும் ஒக்கப்படுகிறது. குறிப்பாக சிகரெட் அட்டைகளிலும் கூட அவை எழுதப்பட்டிருக்கும். சிகரெட்

தமிழகத்தில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பள்ளி மாணவர்கள் மத்தியிலும் கூட இந்த சிகரெட்டின் ஆதிக்கம் தலைதூக்கி காணப்படுகிறது.

இதனால் பலர் வாழ்க்கை சீரழிவதோடு மட்டுமில்லாமல் வாழ்க்கையும் மரணத்திற்கு செல்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரே சிகரெட்டால் தீ விபத்து ஏற்பட்டு பற்றவைத்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் நடந்துள்ளது.காட்பாடி அருகே வி.ஜி ராம் நகர் பகுதியில் சிகரெட் புகைத்த போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

போதையில் இருந்த அந்த இளைஞர் டெரன்சி ஜோயல் சிகரெட் பிடித்தபோது மெத்தை மீது பட்டு தீப்பிடித்து புகை மூட்டம் ஏற்பட்டது. அந்த டெரன்சி ஜோயல் இளைஞருக்கு 21 வயதாக காணப்படுகின்றது. இதனால் புகை மூட்டத்தில் அறைக்குள் சிக்கிய டெரன்சி ஜோயல்   மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment