வானை சூழ்ந்த கரும்புகை.. பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து!!

காஞ்சிபுரத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்பத்தூர் அருகே வரகாஜபுரம் அருகே உள்ள பிளாஸ்டிக் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இதனை குற்றத்தூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 3 வருடங்களாக நடத்தி வருகிறார்.

கொலை வழக்கில் பொய் சாட்சி: வசமாக சிக்கிய டி.எஸ்.பி, வி.ஏ.ஓ… தட்டி தூக்கிய நீதிமன்றம்!

இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. குமார் 5 டன்னிற்கு மேல் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் தீயில் கருகி நாசமாகி உள்ளது.

இந்நிலையில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் கட்டுக்கடங்காத தீயை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அணைத்து வருகின்றனர்.

பெற்ற குழந்தையை விற்ற தாய்! விசாரணையில் திடுக்கிடும் பின்னணி?

இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.