
செய்திகள்
5000 அடி உயரத்தில் திடீரென கிளம்பிய புகை! அலறிய பயணிகள்;
நடுவானில் பறந்த கொண்டிருந்த விமானத்தின் கேபினில் திடீரென புகை வந்ததை தொடர்ந்து அவசரமாக தரையிரக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. இந்நிலையில் விமானம் சுமார் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென கேபினில் இருந்து புகை வெளிவர தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தால் விமானம் மீண்டும் டெல்லிக்கு சென்று அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
