அரச மரத்திலிருந்து வெளிவரும் புகை.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!!

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயில் அருகே உள்ள அரச மரம் தீப்பிடித்து புகை காணப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான சாந்தநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் எதிரில் மிகவும் பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மார்கழி மாதம் பிறந்துள்ளதால் அதிகளவில் பெண்கள் விளக்கேற்றி வழிப்பட்டு வருகின்றனர்.

அலர்ட்! 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் தகவல்!!

அதன் ஒரு பகுதியாக இன்று அதிகாலையில் வழக்கம் போல் மரத்தில் விளக்கிட்டு தீபம் ஏற்றப்பட்டது. இதன் காரணமாக மரத்தில் தீ பற்றத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க முயன்றனர். சுமார் பல மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கனமழை எதிரொலி: குற்றால அருவிகளில் குளிக்க தடை!!

அதிகாலையில் அரச மரத்தில் ஏற்பட்ட தீயினால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.